Viral News
கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி; கலங்காமல் கைக்குழந்தையுடன் ரிக்சா ஓட்டி வரும் இளைஞர்; வைரலாகும் வீடியோ..!!
இணையத்தில் அவ்வப்போது சில நிகழ்வுகள், செய்திகள், வீடியோக்கள் வைரலாகும்.
அவ்வாறு வெளியாகும் வீடியோக்களில் சில நமது மனதை கனக்க செய்யும் வகையில் இருக்கும்.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோ அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறது.
அந்த வீடியோவில் ஒரு இளைஞர் கைக்குழந்தையை ஒரு கையில் ஏந்தியவாறு இன்னொரு கையால் ரிக்சாவை ஓட்டிச் செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் சோக கடலில் ஆழ்த்தி வருகிறது.
பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சியோனி மாவட்டத்தில் கன்ஹர்கான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ராஜேஷ் ரிக்சா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவர்கள் தங்களது குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் அப்பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி இருவரும் நேரில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்த நிலையில் ஒருநாள் ராஜேஷின் மனைவி தனது கைக்குழந்தையையும் கணவரையும் விட்டு தனது கள்ளக்காதலனுடன் சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மனதை தேற்றிக்கொண்ட பின்னர், தனது மனைவியை தேட முயற்சிக்கவில்லை.
தனது கைக்குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என முடிவெடுத்து, தன் குழந்தையை கவனித்து கொண்டு ரிக்சாவும் ஓட்டி வருகிறார்.
