Connect with us

    மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் பெண்ணாக மாற பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..!!

    Operation

    Tamil News

    மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் பெண்ணாக மாற பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..!!

    ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் ஒரு தனியார் லாட்ஜில் இரண்டு பி பார்மா மாணவர்கள் யூடியூப் டுடோரியலைப் பார்த்து பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முயன்றதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Operation

    ஆந்திர மாநிலத்தின் நெல்லூரின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான ஸ்ரீகாந்த் , ஐதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    அந்த ஸ்ரீகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் அவர் விரக்தியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய அந்த இரண்டு மாணவர்களிடம் (மஸ்தான் மற்றும் ஜீவா) தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஸ்ரீகாந்த் இந்த சிகிச்சைக்காக மும்பை செல்ல விரும்பினார், ஆனால் அவர்கள் இருவரும் அவரை மலிவான விலையில் அறுவை சிகிச்சை செய்யலாம் என சமாதானப்படுத்தினர்.

    அதனால் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த்துக்கு அவர்கள் இருவரும் அறுவை சிகிச்சை செய்வதாக கூறி அங்குள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினர்.

    பின்னர் அந்த இரண்டு நண்பர்களும் யூடியூப்- இல் ஒரு வீடியோவைப் பார்த்து சிகிச்சையை தொடங்கினர்.

    அப்போது ஸ்ரீ காந்துக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    அதன் பின்னர் அந்த லாட்ஜ் ஊழியர்கள் சத்தம் கேட்டு அந்த ரூமில் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசில் புகாரளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிந்து அந்த நண்பரை கொன்ற இரு வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!