Connect with us

    மனைவியை கொன்று, ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வராமல் சடலத்துடன் தூங்கிய கணவர்; அதிர்ச்சியில் போலீசார்…!!

    Jeff Charles Sherwood

    World News

    மனைவியை கொன்று, ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வராமல் சடலத்துடன் தூங்கிய கணவர்; அதிர்ச்சியில் போலீசார்…!!

    அமெரிக்காவில் தனது மனைவியை கொலை செய்து விட்டு, ஒருவாரம் அந்த சடலத்துடன் கணவர் வசித்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Jeff Charles Sherwood

    அமெரிக்காவின் Michigan பகுதியை சேர்ந்தவர் Jeff Charles Sherwood, (47). இவருக்கும் Susan Klepsch. என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

    கடந்த 2020- ம் ஆண்டு துவக்கத்தில் உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டது.

    அமெரிக்காவிலும் இதன் பாதிப்பு மிகக் கடுமையாக இருந்தது.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகி கொண்டிருந்தது.

    இதனால் இந்த தம்பதிக்கு பயம் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் பேசி ஒரு முடிவு செய்தனர்.

    அதில் கணவன் தனது மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வது என்று.

    இதனையடுத்து, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது மனைவியை Charles Sherwood கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    அதன் பின்னர் அவரும் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும் அவர் பயத்தில் தன்னுடைய மனைவியின் சடலத்துடன் சுமார் ஒரு வாரம் காலம் வசித்து வந்துள்ளார்.

    இந்த தம்பதி இருவரும் ஒரு வாரத்திற்கு மேலாக வெளியே வரவில்லை என்று காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

    இந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது Charles Sherwood படுக்கை அறையில் தன்னுடைய மனைவியின் சடலத்துடன் அமர்ந்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரண செய்துள்ளனர்.

    அதில் அவர் கொரோனாவிற்கு பயந்து அவர்கள் போட்டிருந்த தற்கொலை திட்டத்தை கூறியுள்ளார்.

    இந்நிலையில் இந்த வழக்கு Oakland நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையில் அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 38 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!