Connect with us

    நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்த இளைஞர்; திடீரென வந்த கணவர்; நடந்த விபரீதம்…!

    Nandini

    Tamil News

    நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்த இளைஞர்; திடீரென வந்த கணவர்; நடந்த விபரீதம்…!

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் சத்தியசீலன் என்கிற அருண் (31).

    பட்டதாரியான இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி நந்தினி (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது.

    சத்தியசீலனின் நண்பர் அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் (29). நெருங்கிய நண்பர்களான இருவரும் சவுண்ட் சர்வீஸ் வேலைக்கு சேர்ந்து செல்வது வழக்கம்.

    Nandini

    இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்தியசீலனின் மனைவி நந்தினிக்கும், பிரகாசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    அடிக்கடி இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரகாசும், நந்தினியும் கண்டியூரில் இருந்து வெளியேறி சுவாமிமலை அருகே அலவந்திபுரம் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடும்பம் நடத்தி வந்தனர்.

    ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கள்ளக்காதலர்கள், அங்கு வந்த ஒரு மாதத்திலேயே இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டதுள்ளது.

    இதையடுத்து நந்தினி தனது கணவர் சத்தியசீலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது நான் உங்களுக்கு துரோகம் செய்து விட்டு உங்கள் நண்பருடன் வந்து விட்டேன்.

    இங்கு வந்த பின்னர்தான் நான் செய்த தவறு எனக்கு தெரியவந்தது. எனவே என்னை மன்னித்து விடுங்கள் நான் மீண்டும் உங்களிடம் வந்து விடுகிறேன். என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து சத்தியசீலன் தீபாவளி முதல் நாள் அன்று நள்ளிரவு சத்தியசீலன் தனது மனைவியை தேடி அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு சென்ற சத்தியசீலன், வீட்டின் கதவை தட்டி உள்ளார். கதவு தட்டும் சத்தம் கேட்டு பிரகாஷ் கதவை திறந்து உள்ளார்.

    அப்போது சத்தியசீலன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை குத்தி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் வீட்டில் இருந்த நந்தினி பிரகாசின் கைகளை பின்புறமாக பிடித்துக்கொண்டார்.

    உடனே பிரகாஷின் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சத்தியசீலன் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பிரகாஷ் துடி, துடித்து உயிரிழந்தார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியசீலன் அவரது மனைவி நந்தினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!