Connect with us

    கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டிச் சென்று சம்பவம் செய்த கணவர்..!

    illegal love pair

    Tamil News

    கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டிச் சென்று சம்பவம் செய்த கணவர்..!

    சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூர் தெற்கு மணக்காடு  பகுதியை சேர்ந்தவர் முருகன்  இவரது மகன் ஜெகதீஸ் வயது 23.

    இவர் அங்குள்ள கூட்டுறவு பால்  சொசைட்டிக்கு சரக்கு  வாகனத்தில் பால் லோடு  ஏற்றி வரும் வேலை செய்து வருகிறார்.

    இவரது பக்கத்து  வீட்டில்  வசித்து வரும் பிரதீப் (வயது 28 ) என்பவரின் மனைவிக்கும் ஜெகதீசுக்கும் இடையே கடந்த ஓராண்டிற்கு முன்பு பழக்கம்  ஏற்பட்டுள்ளது .

    illegal love pair

    நெருங்கி பழகிய அவர்கள் இருவரும் கடந்த 8 மாதத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டனர் .

    இதனை அடுத்து கணவர்  பிரதீப் போலீசில் புகார் செய்த  நிலையில் கள்ளக்காதல்  ஜோடியை பிரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மீண்டும்  பிரதீப்பின் மனைவியுடன்  ஜெகதீஸ் கள்ளக்காதலை  தொடர்ந்துள்ளார்.  இருவரும்  அடிக்கடி  தனிமையில்  சந்தித்து வந்துள்ளனர் .

    இதனை அறிந்த பிரதீப் தனது  மனைவியுடன் உள்ள கள்ளத் தொடர்பை கைவிடுமாறு  ஜெகதீசை கண்டித்து வந்துள்ளார்.

    ஆனாலும் அவர் தனது கள்ளக்காதலை கைவிட மறுத்து தொடர்ந்ததாக  கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆறகளூரில் இருந்து வேப்பம்பூண்டி செல்லும் சாலையில் மாரியம்மன் கோயில் அருகே சரக்கு வாகனத்தில் வந்த ஜெகதீசை வழிமறித்து சரமாரியாக  அரிவாளால் வெட்டியுள்ளார் .

    இதனால் அங்குமிங்கும் அவர் ஓடியுள்ளார். ஆனாலும்  துரத்திச்  சென்று  கை , தோள்பட்டை  உள்ளிட்ட இடங்களில் வெட்டியதில்  படுகாயமடைந்த ஜெகதீஸ்  தான் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தை எடுத்துக்  கொண்டு வேகமாக  சென்றுள்ளார்.

    சிறிது தூரத்தில் தென்னை  மரத்தில் மோதி வாகனம்  நின்றுள்ளது.

    பின்னர் அவ்வழியாக  வந்தவர்கள் படுகாயமடைந்து  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகதீசை  மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக  சேலம் அரசு  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு அவருக்கு  தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.

    இதனையடுத்து ஜெகதீசின் பெற்றோர் வீரகனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார்  விசாரணை  நடத்தி, கொலை  முயற்சி வழக்குப் பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர்.

    பின்னர் அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம்  அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!