Connect with us

    அயோத்தி சரயு நதியில் குளித்துக்கொண்டிருந்த தனது மனைவிக்கு லிப் கிஸ் கொடுத்த இளைஞரை அடி வெளுத்த மக்கள்; வைரல் காணொளி..!

    Man thrashed for kissing wife

    Viral News

    அயோத்தி சரயு நதியில் குளித்துக்கொண்டிருந்த தனது மனைவிக்கு லிப் கிஸ் கொடுத்த இளைஞரை அடி வெளுத்த மக்கள்; வைரல் காணொளி..!

    உத்தரப் பிரதேசத்தின் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த மனைவிக்கு லிப் முத்தம் கொடுத்த கணவர் சுற்றியிருந்த கும்பலால் தாக்கப்பட்டார்.

    Man thrashed for kissing wife

    இந்த சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சரயு நதி என்பது கங்கையின் 7 கிளை நதிகளில் ஒன்று.

    இது இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படுகிறது. அயோத்தி என்பது கடவுள் ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.

    சரயு நதிக்கரையில் தான் அயோத்தி அமைந்துள்ளது.

    இந்த நதியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.

    அந்த வகையில் சரயு நதியில் புனித நீராடுவதற்காக இளம் தம்பதி வந்திருந்தனர்.

    அவர்கள் இருவரும் சரயு நதியில் நீராடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த நபர் தனது மனைவியை உதட்டோடு உதடு வைத்து முத்தமிடுகிறார்.

    இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    அந்தப் பெண்ணையும் ஆணையும் தனித்தனியாக அப்புறப்படுத்தி அந்த ஆணை அடிக்கின்றனர்.

    இது போன்ற அசிங்கத்தை அயோத்தியாவில் அனுமதிக்கமாட்டோம் எனக் கூறுகின்றனர்.

    பதறிப்போன அப்பெண் தனது கணவரை பாதுகாக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை.

    இறுதியாக அவர்கள் இருவரையும் சரயு நதியிலிருந்து அந்த கும்பல் அப்புறப்படுத்துகிறது.

    இது குறித்து அயோத்தியா போலீஸ் சூப்பிரெண்டு ஷைலேஷ் பாண்டே கூறுகையில்,

    அந்த வீடியோ ஒரு வாரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது. அதில் உள்ள தம்பதியினரின் அடையாளம் தெரியவில்லை.

    அந்த தம்பதி புகார் கொடுத்தால் நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம். அந்தத் தம்பதி எங்கு வசிக்கின்றனர் என்றும் தேடி வருகிறோம் என்றார்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!