Tamil News
முதல் மனைவிக்கு தெரியாமல் வேலைக்கு வந்த பெண்ணை வீட்டுக்காரி ஆக்கிய முதியவர்; இறுதியில் நடந்த விபரீதம்…!!
சென்னை பழைய வண்ணார்பேட்டையை அடுத்த காட்பாடா மெயின் தெருவை சேர்ந்தவர் ஷாஜஹான் (வயது 47).
இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளது. இவர் அப்பகுதியில் தோல் நிறுவனம் ஒன்றை ஷாஜஹான் நடத்தி வந்துள்ளார்.
அப்போது, அங்கே டெய்லராக பணிபுரிந்து வந்த ஹசீனா பேகம் என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், ஹசீனாவை தமது முதல் மனைவிக்கு தெரியாமல் நைனியப்பன் கார்டன், ஆறாவது சந்து பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுத்து தங்க வைத்துள்ளார்.
ஹசீனாவின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று உல்லாசமாக ஷாஜஹான் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹசீனாவின் வீட்டில் ஷாஜஹான் தங்கி இருந்த நிலையில், மறுநாள் காலையில் ஹசீனா பேகம் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும், அவர் போலீசாரிடம் தனது மனைவி ஷாக் அடித்து இருந்ததாக ஷாஜஹான் கூறியுள்ளார்.
தனது மகளின் கையில் காயங்கள் இருந்ததால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ஹசீனாவின் தாயார் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹசீனாவின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, ஹசீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
இதில், மூச்சடைக்கப்படும், உடலில் மின்சாரம் செலுத்தப்பட்டும் ஹசீனா கொலை செய்யப்பட்டது உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றது.
இதன் பெயரில், கணவர் ஷாஜஹானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் உண்மையை மறைத்த அவர், பின்பு மனைவி ஹசீனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
போலீசாரின் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்லும் கணவர் ஷாஜஹான், தன்னுடன் நிறைய நாட்கள் தங்க வேண்டும் என ஹசீனா அவரை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அதே போல, முதல் மனைவியுடனும் நிறைய நேரத்தை அவர் செலவிடுவதும் ஹசீனாவுக்கு பிடிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த ஷாஜஹான், தனது மனைவி ஹசீனா தூக்கத்தில் இருந்த போதே கொலை செய்துள்ளார்.
மேலும் தான் மின்சாரம் செலுத்தி கொலை செய்ததை மறைத்து, மனைவி ஷாக் அடித்து இறந்தது போல காண்பிக்க அவரது உடலில் மிஷின் கொண்டு காயத்தை உருவாக்கியதையும் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
