Connect with us

    தினக்கூலியாக இருந்த 4 குழந்தைகளின் தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்; யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் கொட்டும் வருமானம்..!!

    Viral News

    தினக்கூலியாக இருந்த 4 குழந்தைகளின் தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்; யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் கொட்டும் வருமானம்..!!

    இந்தியாவில் தினக்கூலியாக இருந்த நபர் தற்போது யூடியூப் சேனல் தொடங்கி லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசாவை சேர்ந்தவர் ஐசக் முண்டா (35). இவருக்கு திருமணமாகி மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.

    தினக்கூலியாக சொற்ப வருமானம் ஈட்டி வந்த ஐசக் கடந்தாண்டு தனது நண்பர்கள் செல்போனில் சில வீடியோக்களை பார்த்துள்ளார்.

    இதையடுத்து கடந்தாண்டு ரூ 3000 கடனாக வாங்கி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினார்.

    அதில் அதிகம் சைட் டிஷ் எதுவும் இல்லாமல் தான் அரிசி சாதம் சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து தனது ஐசன் முண்டா ஈட்டிங் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

    நம்பமுடியாத வகையில் அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது.

    இதன் பின்னர் பழங்குடி கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்களில் சமையல், கலாச்சாரம் போன்றவைகளை,
    வீடியோவாக எடுத்து போட சக்கை போடு போட்டு அனைத்து வீடியோக்களும் ஹிட் அடித்தது.

    முதல் வீடியோவுக்கு ரூ 37000 அவருக்கு கிடைத்தது. பின்னர் லட்சக்கணக்கில் வருமானம் வர தொடங்கியுள்ளது.

    ஐசக் கூறுகையில், நான் ஏழாம் வகுப்பு தான் படித்துள்ளேன், என் சமுதாயம் தொடர்பான வீடியோக்களை பதிவிட தொடங்கி இப்போது என் சேனல் பிரபலமாகி உள்ளது.

    இதுவரை 250 வீடியோ போட்டுள்ளேன், என் சேனலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான subscribers உள்ளனர் என கூறியுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!