Connect with us

    கல்லூரி விடுதிக்கு தனது காதலியை டிராவல் பேக்கில் மறைத்து வைத்து தூக்க முடியாமல் தூக்கி சென்ற மாணவர்; விடுதி வாசலில் நிகழ்ந்த திடீர் திருப்பம்..!!

    college student tries to sneak girlfriend into hostel by hiding her in suitcase

    Viral News

    கல்லூரி விடுதிக்கு தனது காதலியை டிராவல் பேக்கில் மறைத்து வைத்து தூக்க முடியாமல் தூக்கி சென்ற மாணவர்; விடுதி வாசலில் நிகழ்ந்த திடீர் திருப்பம்..!!

    கர்நாடகாவில் கல்லூரி மாணவர் ( Manipal student) ஒருவர் தனது டிராவல் பேக்கில் தனது காதலியை படுக்க வைத்து விடுதிக்கு கொண்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    Manipal student tries to sneak girlfriend into hostel by hiding her in suitcase

    உடுப்பியில் உள்ள மணிப்பால் என்ற ஊரில் உள்ள பொறியியல் கல்லுரியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இது தொடர்பா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    கர்நாடக மாநிலம் மணிப்பாலில் உள்ள எம்.ஐ.டி பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கிப்படித்து வரும் மாணவர் ஒருவர், தனது காதலியை, நிர்வாகத்திற்கு தெரியாமல், தான் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளார்.

    இதையடுத்து டிராவல் பேக் ஒன்றை வாங்கி அதற்குள் தனது காதலியை கை கால்களை மடக்கி படுத்துக் கொள்ள வைத்து, டிராவல் பேக்கை மூடி, அப்படியே விடுதிக்குள் தூக்கிச்செல்ல முயன்றுள்ளார்.

    விடுதி வாசலில் காவலாளிகள் ஒவ்வொரு மாணவரின் உடமைகளையும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிப்பது வழக்கம்.

    அந்த மாணவர் கொண்டு வந்த சூட்கேஸ் மிகப்பெரிய அளவில் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி காவலாளிகள் அதில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை எடுத்து வருவதாக மாணவர் கூறியுள்ளார்.

    ஆனால் சந்தேகமடைந்த காவலாளிகள் சூட்கேசை திறக்க கூறினர். ஆனால் மாணவர் அது இது என சாக்கு போக்கு கூறி சமாளித்துள்ளார்.

    அதை ஏற்காக காவலாளிகள் சூட்கேசை திறந்து போது அதில் இருந்து ஒரு இளம்பெண் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.

    இதனை கண்ட அங்கிருந்த காவலாளிகளும், சக மாணவர்களும் அதிர்ந்து போயினர். கையும் களவுமாக சிக்கிக் கொண்ட அந்த மாணவனோ தலையில் கைவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

    விசாரணையில், அந்த பெண் மாணவரின் காதலி என்பது தெரியவந்தது.

    விடுதிக்குள் அந்நியர்களை அனுமதி மாட்டார்கள் என்பதால், தந்திரமாக சூட்கேசில் மறைத்து உள்ளே செல்ல முயற்சித்ததாக மாணவர் கூறினார்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!