Connect with us

    பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடத்தி வைக்கப்படும் திருமணம்; வினோத சடங்கினை கடைப்பிடிக்கும் கிராம மக்கள்; எங்கு தெரியுமா..??

    Womans wedding

    Viral News

    பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடத்தி வைக்கப்படும் திருமணம்; வினோத சடங்கினை கடைப்பிடிக்கும் கிராம மக்கள்; எங்கு தெரியுமா..??

    Womans wedding

    நாட்டில் உள்ள பல இடங்களில், கிராம மக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், மிக மிக வினோதமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவதை நாம் நிறைய கேள்விபட்டிருப்போம்.

    அந்த குறிப்பிட்ட சமுதாயம் அல்லது பகுதியை சேர்ந்த மக்களுக்கு, அந்த பழக்க வழக்கங்கள் புதிதாக தோன்றாது. ஆனால், அதனை வெளியே இருந்து கேள்விப்படும் நபர்களுக்கு நிச்சயம் அவை, வியப்பை தான் கொடுக்கும்.

    அந்த குறிப்பிட்ட சமுதாயம் அல்லது பகுதியை சேர்ந்த மக்களுக்கு, அந்த பழக்க வழக்கங்கள் புதிதாக தோன்றாது.

    ஆனால், அதனை வெளியே இருந்து கேள்விப்படும் நபர்களுக்கு நிச்சயம் அவை, வியப்பை தான் கொடுக்கும்.

    Dadduve Maduve என அழைக்கப்படும் இந்த சடங்கானது, இரு பெண்களுக்கு இடையே நடைபெறும் திருமணம் குறித்ததாகும்.

    இதனை கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள Halakki Okkaliga என்ற சமுதாய மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    ஒரே பாலின திருமணங்கள், இன்றைய காலகட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றாலும், இதில் குறிப்பிட்ட பழங்குடி மக்கள், இந்த சடங்கினை ஏராளமான ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே கொண்டாடி வருகின்றனர்.

    அதாவது, இது எப்போது ஆரம்பித்தது என்பது கூட, தற்போதுள்ள மக்களுக்கு தெரியாத அளவுக்கு இது பழமையான சடங்கு என்றும் கூறப்படுகிறது.

    தங்களின் சமுதாயத்தில் உள்ள இரண்டு பெண்கள், மாலை அணிந்து ஒருவர் மாப்பிள்ளையாகவும், மற்றொருவர் மணப்பெண்ணாகவும் கருதப்படுவார்கள்.

    வழக்கமான அனைத்து திருமண சடங்குகளும் இதில் பின்பற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

    சமீபத்தில் கூட Dadduve Maduve என்ற திருமண சடங்கு அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது.

    தேவைப்படும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழை பெய்து விட கூடாது என்பதற்காக, இந்திரனை வேண்டி, இந்த திருமண நிகழ்வை ஆண்டு தோறும் அந்த பழங்குடி மக்கள் நடத்தி வருகிறார்கள்.

    ஊர்வலம் மற்றும் சடங்குகள் முடிவடைந்த பிறகு, புதிதாக திருமணமாணவர்களை அனைவரும் ஆசீர்வதிப்பார்கள்.

    வழக்கமான திருமணம் போல, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்குவார்கள்.

    அதன் பின்னர், ஆடல் பாடல் மற்றும் திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அற்புதமான விருந்தும் வழங்கப்படுகிறது.

    அனைத்து வித கொண்டாட்டங்களும் முடிவடைந்த பிறகு, அனைவரும் தங்களின் வீட்டிற்கு திரும்பி செல்வார்கள்.

    திருமணமான இரண்டு பெண்கள் கூட ஒன்றாக இணைந்து வாழாமல், தனித்தனியாக பிரிந்து விடுவார்கள்.

    ஆம், இது சடங்கிற்காக நடத்தப்படும் போலி திருமணம் போன்றது மட்டும் தான்.

    Halakki பழங்குடி மக்களின் வாழ்வில், மழை என்பது மரியாதைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இதனால் தான், இப்படி ஒரு சடங்கினை ஆண்டு தோறும் பின்பற்றி, திருமணம் போல ஒரு போலி சடங்கு ஒன்றை மிக கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!