Connect with us

    திருமணத்தன்று ஃபுல் போதையில் இருந்த மணமகன்; அதிர்ச்சியில் மணமகனை உதறி தள்ளி விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

    Tamil News

    திருமணத்தன்று ஃபுல் போதையில் இருந்த மணமகன்; அதிர்ச்சியில் மணமகனை உதறி தள்ளி விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

    தர்மபுரி பாலக்கோடு அருகே மணமகன் குடித்து விட்டு போ.தை.யில் இருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன்(வயது 32) என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நேரு நகரை சேர்ந்த லட்சுமி (வயது 22) என்ற பெண்ணிற்கும், திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

    இவர்களின் திருமணம் சில நாட்களுக்கு முன் ராயக்கோட்டை அருகேயுள்ள ஈஸ்வரன் கோவிலில் நடைபெற இருந்தது.

    இதற்காக பெண் வீட்டார் தங்கள் உறவினர்களுடன் ஈஸ்வரன் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர்.

    ஆனால், கோவிலில் மாப்பிள்ளை வீட்டார் யாரும் அங்கு இல்லாததால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனையடுத்து மணமகன் சரவணன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு மணமகனான சரவணன் மதுபோதையில் தள்ளாடியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் கோபமுற்ற மணமகள் வீட்டார திருமணம் வேண்டாம் என திருமணத்தை நிறுத்தியதோடு தாங்கள் திருமணத்திற்காக செய்த செலவுகளை மாப்பிள்ளை வீட்டார் தர வேண்டும் என்றும், பெண்ணின் உறவினர்கள் மாரண்ட அள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

    புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் மணமகன் சரவணனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போ.தை தெளிந்த மணமகன் சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன் என்றும், தனக்கு நிச்சயக்கபட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என காவல் நிலையத்திலேயே சத்தியம் செய்துள்ளார்.

    ஆனால், மணமகள் லட்சுமி இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டு தனது உறவினர்களுடன் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!