Viral News
மாமியார் கொடுமை; கோபத்தில் இளம்பெண் செய்த பகீர் வேலை..!!
திருச்சூர் அடுத்த புன்னயூர்குளம் பகுதியில் மாமியார் கொடுமை காரணமாக அத்துபுரம் செட்டிசேரி குன்ஹிப்பாவின் மகள் பைரூஸ் (26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக அவரது மாமியார் மற்றும் நாத்தனார் கைது செய்யப்பட்டனர்.
பைரூஸின் கணவர் ஜாபர் சித்திக்கின் தாயார் சங்கரம்குளம் பிடவண்ணூர் ரசியா (50), அவரது மகள் சம்வ்ருதா (31) ஆகியோரை குருவாயூர் ஏசிபி கே.ஜி. சுரேஷின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கேடகாடு போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்ததால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி குன்னம்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் ஜாபர் சித்திக் (32) என்பவர் முதல் குற்றவாளி.
வளைகுடா நாட்டில் உள்ள அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பாத நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஒருவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, பைரூஸ் தனது நான்கு மாத பெண் குழந்தையையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
