Connect with us

    விருப்பம் இல்லாத பையனுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோரால், திருமணம் ஆன ஒரு வாரத்தில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!

    Married girl sandhya

    Tamil News

    விருப்பம் இல்லாத பையனுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோரால், திருமணம் ஆன ஒரு வாரத்தில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!

    விருப்பம் இல்லாத பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த பெற்றோரால், அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

    Married girl sandhya

    சென்னை அம்பத்தூர் அடுத்த வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் சந்தியா (22)

    இவர் பி.காம் முடித்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத கோச்சிங் சென்டரில் படித்து வந்தார்.

    இவரது வீட்டில் உறவினரான சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விரும்பி, சந்தியாவின் கோச்சிங் சென்டரிலேயே வந்து சேர்ந்தார்.

    இப்படிடப்பட்ட சூழலில்தான், சந்தியாவை ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க கவிதா முடிவு செய்தார்.

    இதனை அடுத்து, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 7ந்தேதி வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சந்தியா- ராஜா இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது…

    ஆனால், சந்தியாவோ, ஆவடியை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

    இந்த காதல் விவகாரத்தை தன்னுடைய அம்மா கவிதாவிடம் சொன்னார். ஆனால், அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

    கடந்த 4ந்தேதி சந்தியா- ராஜா திருமணம் முறைப்படி சேலத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பிறகு, ராஜா- சந்தியா ஆகியோர் கொரட்டூருக்கு திரும்பினர்.

    ஆனால், 6-ம் தேதியே, அதாவது 7ந்தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதனை கணவர் ராஜாவும், அம்மா கவிதாவும் நேரடியாகவே பார்த்துவிட்டு, மகளை மீட்டனர்.

    உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் சேர்த்துள்ளனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இந்த புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில், சந்தியாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

    மேலும், சந்தியாவிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறதால் ஆர்டிஒ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் கொரட்டூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!