Tamil News
திருமணமான 10 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு; இதயத்தை உறைய வைத்த சம்பவம் 😲😲👇👇
திருவண்ணாமலை அருகே திருமணமாகி பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வரதட்சனை கொடுமை காரணமாக பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி அடுத்த காட்டுவனத்தம் கிராமத்தைச் சார்ந்த வடிவேலு என்பவருக்கும் துர்க்கம் கிராமத்தைச் சார்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடந்து முடிந்த மூன்றாவது மாதத்திலேயே வரதட்சணை கொடுமை காரணமாக, சண்முகசுந்தரி தனது தந்தை வீட்டிற்கு வந்து உள்ளார்.
இந்நிலையில் உறவினர்கள் சமரசம் செய்து மீண்டும் கணவர் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இருப்பினும், வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
அப்போது அவருடைய கணவரிடமும் மாமியாரிடமும் நீங்கள் என்னை கொடுமை படுத்த மாட்டீர்கள் என்று கூறிதான் என்னை சமாதானம் செய்து கூட்டி வந்தீர்கள் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சண்முகசுந்தரி கடந்த 21ஆம் தேதி நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த கணவர் வடிவேல், சண்முகசுந்தரியை திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரி 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, சண்முகசுந்தரியின் தந்தை பாலு வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
வரதட்சணை கொடுமைக்கு காரணமான கணவர் வடிவேலு, மாமனார் நடேசன், மாமியார் சாரதாம்பாள், வடிவேலுவின் அக்கா காமாட்சி, மாமா திருவேங்கடம், அண்ணன் சங்கர் உள்ளிட்ட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகி பத்து மாதங்கள் ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
