Connect with us

    தந்தையை இழந்து தவித்த சிறுமியை கர்ப்பமாக்கிய முதியோர்கள்; அதிர்ச்சி சம்பவம்…!

    Minor girl abused

    Uncategorized

    தந்தையை இழந்து தவித்த சிறுமியை கர்ப்பமாக்கிய முதியோர்கள்; அதிர்ச்சி சம்பவம்…!

    மதுரை அவனியாபுரத்தில் 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய இரண்டு முதியோரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    Minor girl abused

    மதுரை அவனியாபுரம் அருகே ஒரு தம்பதியின் 15 வயது மகள் அருகில் உள்ள அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    உயிரிழந்த தந்தையின் நெருங்கிய நண்பரான ரமேஷ் என்பவர் இந்த குடும்பத்திற்கு தேவையான பொருளாதார மற்றும் அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

    நேற்று சிறுமி வயிற்று வலி காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை செய்தனர்.

    அப்போது சிறுமியின் வீட்டு அருகே உள்ள பாலமுருகன் (எ) முருகேசன் என்பவர் சிறுமியை அடிக்கடி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

    அதே போல் சிறுமியின் விவகாரம் ரமேஷிற்கும் தெரியவந்ததை தொடர்ந்து, இதனை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி சிறுமி மீது ஆசைப்பட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.

    பயத்தில் சிறுமியும் இதனை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த தாயார் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் இந்த விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று மதியம் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் சிறுமியை கர்ப்பமாகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து பாலமுருகன்(எ) முருகேசன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!