Tamil News
12 வயது சிறுவனால்,17 வயது சிறுமி பெண் குழந்தை பெற்றெடுத்த கொடுமை; அதிர்ச்சியில் பெற்றோர்..??
தஞ்சை அருகே 17 வயது சிறுமியை 12 வயது சிறுவன், பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூரில் மனோஜி பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.
அதே போல், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளான்.
இவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் இவர்களுக்கிடையே மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான், அந்த 17 வயது சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு, வலி அதிகமாகி இருக்கிறது.
இதனால் பயந்து போன அவரது பெற்றோர், உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிறுமி அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் அச்சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் பக்கத்து வீட்டைச்சேர்ந்த சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும், இதில் தான் கர்ப்பமானதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் இதுபற்றி விசாரித்தனர்.
தனது மகள் கர்ப்பமானது சமீபத்தில் தான் தெரிந்தது.
இதுபற்றி தங்களிடம் தெரிவிக்காமல் அவர் மறைத்து விட்டதாகவும் கூறினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக உள்ளதாக கூறியபோது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். இங்கு மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுபற்றி அரசு மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்தனர் என்று கூறினர்.
இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி வளாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர்.
பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
