Politics
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு யாருடையது தெரியுமா..??
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு முன்னாள் உரிமையாளர்கள் இன்று வந்த நிலையில் அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டின் உரிமையாளராக இருந்த சர்வேஸ்வர ஐயரின் பேத்தி சரோஜா சீதாராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
சரோஜா சீதாராமன் 17 வயதாகும் போது இந்த வீடு விற்கப்பட்டுள்ளது தற்போது அவருக்கு வயது 86.
அப்பொழுது அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், தனது திருமணத்தை கோபாலபுரம் இல்லத்தில் நடத்த கருணாநிதியிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் சம்மதம் தெரிவித்த நிலையில் கருணாநிதி முன்னிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கோபாலபுரம் வீட்டை பார்க்க வேண்டும் என்ற சரோஜா சீதாராமன் ஆசைப்பட்டதாகவும், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கலைஞர் கருணாநிதி வாழ்ந்த வீட்டின் உரிமையாளராக இருந்த சர்வேஸ் ஐயர் என்பவர் தான் கோபாலபுரத்து வீட்டின் முன்னாள் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கோபாலபுரம் இல்லத்தை சுற்றிப்பார்த்தது பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார் சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா சீதாராமன்.
தங்களை முதலமைச்சரே நேரில் வந்து வீட்டை சுற்றிக்காட்டியது மகிழ்ச்சி தருவதாகவும் முதல்வர் குடும்பத்தினரை அமெரிக்காவில் உள்ள தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
