Politics
கழிவு நீர்க் கால்வாயில் கட்டு கட்டாக கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்; பொதுமக்கள் அதிர்ச்சி…!!
ஈரோடு அருகே கால்வாய் ஒன்றில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, மேட்டூா் சாலையில் உள்ள கழிவுநீா் கால்வாய்களை வெள்ளிக்கிழமை காலை ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் செந்தில், சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் சுத்தம் செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, கழிவுநீா் கால்வாயில் 10க்கும் மேற்பட்ட 500 ரூபாய் தாள்கள் மிதந்து வந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
மேலும், அந்த தாள்களை தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
வருகின்ற 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பல விதிமுறைகள் அமலில் இருக்கிறது.
தோ்தல் நேரம் என்பதால் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
ரூ. 50,000க்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வருகின்றனா்.
ஒருவேளை கால்வாயில் இருந்த இந்த ருபாய் நோட்டுக்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா அல்லது வேறு யாருடைய பணமாவது கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டதா என்ற கண்ணோட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
