Tamil News
தாயும் மகளும் சேர்ந்து செய்த மோசமான காரியம்; கதறி அழும் இளைஞர்கள்..!
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றி அமெரிக்க தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் தாய், மகளை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி, பாரதி நகர், பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா(34), இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ஆவார்.
வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என்று எண்ணி தனது நண்பர் மூலம் கோயம்பேட்டில் உள்ள ‘Assyst Career Generating Pvt Ltd’ என்ற நிறுவனத்தை நேரில் சென்று அணுகியுள்ளார்.
அங்கு கிளீனா கிரியேட்டர் (29), மற்றும் அவரது அம்மா அனிதா கிரியேட்டர் (59), நல்ல விதமாக பேசி அவருடன் பழகியுள்ளனர்.
பிறகு 25 லட்ச ரூபாய் பணத்தை பெற்று போர்ச்சுக்கல் நாட்டிற்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தனர்.
ஆனால், அவர்கள் சொன்னது போல வேலை வாங்கித் தரவில்லை.
இதனால் தன்ஷிகா வெளிநாட்டு வேலை என்ன ஆனது தொடர்ந்து வலியுறுத்தியதால் பல தவணைகள் மூலம் ரூ.11 லட்சத்தை திரும்பத் தந்துள்ளனர்.
இதன் பின் கிளீனா, அனிதா ஆகியோர் செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு அலுவலகத்தை மூடி விட்டு தலைமறைவாகினர்.
இது தொடர்பாக 22-12-2021 அன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் தன்ஷிகா, அடையார் துணை ஆணையர் மகேந்திரன் அவர்களை கடந்த மாதம் அணுகினார்.
அவர் வழக்குப்பதிவு செய்ய உத்தவிட்டு, லுக் அவுட் நோட்டிஸும் வழங்கினார்.
நேற்று கிளீனா மற்றும் அவரது தாய் அனிதா இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
அமெரிக்கா செல்லவிருந்த கிளீனாவை அவரது தாய் வழியனுப்ப சென்றிருந்தார்.
அப்போது லுக் அவுட் நோட்டிஸின் அடிப்படையில் அவர்களை பிடித்து வேளச்சேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரித்ததில் இவர்கள் இது போல் பலபேரை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
