Connect with us

    பிஞ்சு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்; நெஞ்சை உலுக்கும் சம்பவம் 😲😲👇👇

    Mother committed suicide

    Tamil News

    பிஞ்சு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்; நெஞ்சை உலுக்கும் சம்பவம் 😲😲👇👇

    கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Mother committed suicide

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்.

    இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36). இந்த தம்பதிக்கு கனிஷ்கா(7), சர்வன் (3) என இரு பிள்ளைகள் இருந்தனர்.

    வெங்கடேஷ் தொழில் நிமித்தமாக திருப்பதிக்கு சென்றுவிட்ட நிலையில் காயத்ரி தனது இரு குழந்தைகளுடன் நடுப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி வந்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் காயத்ரி இரு குழந்தைகளையும் தூக்கில் மாட்டிவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இச்சம்பவம் அறிந்து வந்த மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து மூன்று பேர் உடலையும் கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 6 மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.

    தற்போது அதே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரியில் 36 வயதான பெண் தனது மகள் மற்றும் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் காயத்ரி குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதன் காரணம் குறித்து போலீசாரின் விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!