Viral News
வயதான பெற்ற தாயை கோயிலுக்கு அழைத்து சென்று விட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆன மகன்; மகனை காணாது கண்ணீரில் மூழ்கிய தாய்..!
வயதான பெற்ற தாயை கோயிலுக்கு அழைத்து சென்று விட்டு, அங்கிருந்து மகன் எஸ்கேப் ஆன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் ஹூலிகி கிராமத்தில் புகழ்பெற்ற ஹூலிகெம்மா கோவில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் நடை அடைக்கும் வரை 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பரிதாபமாக அமர்ந்திருந்தார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் தனது மகருடன் கோவிலுக்கு வந்ததாக கூறினார்.
மேலும், அவருடைய மகன் தனது கையில் செல்போன் எண் எழுதிய காகிதம் ஒன்றையும், ஒரு செல்போனையும் கொடுத்துவிட்டு அழைப்பதாக கூறி சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அருகில் இருந்தவர்கள் அந்த மூதாட்டி வைத்திருந்த காகிதத்தையும், செல்போனையும் வாங்கி பார்த்தனர்.
அதில் அவருடைய மகன் செல்போன் எண் இல்லாத வெற்று காகிதத்தையும், சிம் கார்டு இல்லாத செல்போனையும் கொடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.
இது குறித்து முனிராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் மூதாட்டியின் மகன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
