Viral News
தாய் இறந்தது தெரியாமல் தாயின் சடலத்துடன் 4 நாட்கள் உறங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்த 10 வயது சிறுவன்..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி வித்யாநகர் காலனியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. தனியார் கல்லூரி பேராசிரியரான இவர் கணவரைப் பிரிந்து தனது 10 வயது மகன் ஷாம் கிஷோருடன் தனியாக வசித்துவந்தார்.
ஷாம் அருகில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்தான்.
ராஜலட்சுமி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்த வந்த நிலையில், அவரது மகன் ஷாம் கிஷார் லேசாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி உலக மகளிர் தினம் அன்று ராஜலட்சுமி வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்துள்ளார்.
மறுநாள் வயிறு பசித்தபோது, அம்மா ஏற்கெனவே சொல்லிக்கொடுத்திருந்தபடி சாதம் வடித்து, அவனும் சாப்பிட்டு, தாய்க்கும் ஊட்ட முயன்றிருக்கிறான்.
தாய்க்கு ஊட்ட முயற்சி செய்தும் சாப்பிடாததால் தாயின் சடலத்துடன் இரவில் உறங்கி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வந்துள்ளான்.
பள்ளியில் ஷாம் மீது துர்நாற்றம் வீசியதால், அவனை பள்ளி நிர்வாகத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அப்போது வீட்டில் தாய் இறந்து கிடப்பதை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்து, ராஜலட்சுமி சகோதரர் துர்கா பிரசாத்திற்கு போன் செய்து தெரிவித்தனர்.
அங்கு வந்த துர்கா பிரசாத் எம்.ஆர். பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு நாட்களாக தாயின் உடலுடன் மகன் தங்கியிருந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
