Tamil News
பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை 4-வது மாடியில் இருந்து வீசி எறிந்த கொடூர தாய்..!!
பெங்களூரு சம்பங்கிராம் நகர் பகுதியில் உள்ள அத்விக் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பல் டாக்டர் சுஷ்மா.
இவரது கணவர் கிரண். இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. 6 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
6 வருடத்திற்கு பின்னரே குழந்தை வரம் கிடைத்திருக்கிறது.
பெண் குழந்தை பிறந்து ஐந்து வயதாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் தங்கள் மகளுக்கு மனவளர்ச்சி குன்றியிருப்பது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து பல மருத்துவமனைகளில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.
ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சுஷ்மா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் குழந்தையை வளர்க்க மனம் இல்லாமல் ரயில் நிலையத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்திருக்கிறார்.
இதை அறிந்த கிரண் ரயில் நிலையம் சென்று மகளை மீட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த 4ம் தேதி அன்று மதியம் மூன்று மணியளவில் 4வது மாடியில் இருந்து வீசி கொன்றிருக்கிறார்.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
நான்காவது மாடியில் இருந்து அந்த குழந்தையை பிடித்து தள்ளுகிறார்.
அந்த குழந்தை பயத்தில் தாயின் கழுத்தை இறுக பிடித்துக்கொண்டிருக்க, ஆனால் கையை வலுக்கட்டாயமாக பிடித்து உதறிவிட்டு கீழே தள்ளுகிறார் சுஷ்மா.
இதில் கீழே விழுந்ததுமே பரிதாபமாக அந்த குழந்தை உயிரிழந்திருக்கிறது.
யாரும் இல்லாதபோது குழந்தையை கொன்றுவிட்டு, அதன் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்ததும் தானும் குதிப்பது போல் தற்கொலை நாடகமாடுகிறார்.
சுஷ்மாவை பிடித்து இழுத்து விடுகிறார்கள் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சம்பங்கி ராம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மாவை கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுஷ்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மகள் மீது அதிக பிரியம் கொண்ட கிரண், வளர்க்க கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி இருந்தால் என் குழந்தையை நானே பார்த்துக்கொண்டிருப்பேனே. இப்படி செஞ்சுட்டாளே, ஒன்றும் அறியாத அந்த குழந்தையை இப்படி செஞ்சுட்டாளே என்று கதறுகிறார் கிரண்.
