Viral News
கடலில் மிதந்து வந்த தங்க நிற தேர்; ஆச்சரியத்தில் இழுத்து வந்த பொதுமக்கள்..!
ஆந்திர மாநிலம் ஶ்ரீகாகுளம் பகுதியில் சுனாப்பள்ளி கடற்கரைப்பகுதியில் தங்க நிறத்திலான தேர் மிதந்து வந்துள்ளது அங்கிருந்த மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஆந்திர கடலோர மாவட்டமான ஸ்ரீகாகுளத்தில் சுனாபள்ளி கடற்கரை பகுதி உள்ளது.
இங்கு தங்க நிறத்தில் ஜொலிக்கும் பிரமாண்ட தேர் கடலோரமாக நேற்று மிதந்து வந்தது.
இதனை கண்ட கடலோர பொதுமக்கள் தேரை கயிறு கட்டி கோவிலில் வடம் பிடித்து இழுப்பது போல் அதிர்ச்சியுடன் இழுத்தனர்.
இதனை தொடர்ந்து அருகே வந்த தேர் முழுமையான தேர் அல்ல என்று தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அழகாக அலங்காரம் செய்து இருந்த அந்த பாதி அளவிலான தேரை காண மக்கள் அனைவரும் கடலோர பகுதியில் திரண்டனர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து அந்த தேரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தங்க நிறத்தில் உள்ள தேரை கடல் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அசனி புயலாக மாறியுள்ளது.
இதன் காரணமாக மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து இந்த தேர் காற்றில் அடித்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தேர் வெளிநாட்டில் இருந்து வர வாய்ப்பு இல்லையென்றும், கடலோரப்பகுதியில் எங்கயோ திரைப்பட படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அலையின் சீற்றத்தால் ஶ்ரீகாகுளம் பகுதிக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று சாந்தபொம்மாலி பகுதியை சேர்ந்த தாசில்தார் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
