Cinema
திருமணம் ஆகி 4 மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா; எப்படி சாத்தியமானது; நடந்தது இதுதான்..!
தமிழ் சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது.
இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் பல வருடங்களாக காதலித்து வந்ததும், இருவரும் லிவ்விங் டூ கெதரில் பல வருடங்கள் இருந்ததும், ஊர் ஊராக இருவரும் ஜாலியாக சுற்றி திரிந்ததும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதிதான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.
அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர்.
அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டு போட்டோவுடன் விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார்.
ஏனெனில், கடந்த சில மாதங்களாக வெளியான எந்த புகைப்படத்திலும் நயன்தாரா கர்ப்பம் ஆனதாக தெரியவில்லை. அவரின் வயிறும் பெரிதாக இல்லை.
அப்படி இருக்க எப்படி நயனுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
எனவே, வாடகை தாய் மூலமே குழந்தை பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனெனில், நயன்தாரா உடலில் உள்ள பிரச்சனையால் அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகர், நடிகையர்கள் பலரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதையே விரும்புகின்றனர். பாலிவுட்டில் இது அதிகம் நடப்பதுண்டு.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூட வாடகைத்தாய் மூலம் ஒரு ஆண் குழந்தைக்கு அப்பா ஆனது குறிப்பிடத்தக்கது.
