Connect with us

    விக்னேஷ் சிவனை விட நயன்தாரா வயதில் மூத்தவராமே; எத்தனை வயது மூத்தவர் தெரியுமா..??

    Vikki nayan

    Cinema

    விக்னேஷ் சிவனை விட நயன்தாரா வயதில் மூத்தவராமே; எத்தனை வயது மூத்தவர் தெரியுமா..??

    Vikki nayan

    தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

    இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ்  சிவனும் ஒருவரை ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்தனர்

    இந்நிலையில் கவர்களது திருமணம் சென்னையில் சில தினங்களுக்கு முன் திரைபிரபலங்கள் பலர் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடந்தது.

    இவர்களது திருமண விழாவில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இயக்குநர் மணிரத்தனம், ரஜினி, ஷாருக்கான், அட்லி, போனிகபூர் , கார்த்தி , விஜய், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்

    திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள்

    அங்கு செருப்பு காலுடன் நடக்க தடை செய்யப்பட்ட பகுதியில் செருப்புடன் நடந்து சென்று போட்டோஷூட் நடத்தியதால் சர்ச்சை வெடித்தது.

    இதையடுத்து அதற்காக மன்னிப்பு கோரி கடிதம் அளித்து இருந்தார் விக்னேஷ்.

    இந்த நிலையில், நயன்தாராவின் திருமணம் பற்றிய தகவல்களை அதிகம் தேடியுள்ளனர் ரசிகர்கள்.

    திருமணம் முடிந்ததும் அவர் அணிந்து வந்த புடவை, நகை இவர்கள் திருமணத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவு ஆகிய தலைப்புக்களை தான் இணையத்தில் அதிகம் தேடி உள்ளனர்.

    இதனை தவிர்த்து, நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையேயான வயது வித்தியாசம், என்ன என்பதை கூகுளில் நெட்டிசன்கள் அதிகம் தேடி வருகின்றனர்.

    அதன்படி, விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 36 ஆகிறது.

    நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 37 ஆகிறது.

    எனவே, நயன்தாரா விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதைத்தான் நெட்டிசன்கள் கூகுளில் அதிகம் தேடியிருக்கிறார்களாம்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!