Cinema
விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தை காண கேரளாவில் இருந்து 700 கி.மீ பைக்கில் பயணம் செய்து வந்த கர்ப்பிணி பெண்..!
தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்தனர்
இந்நிலையில் கவர்களது திருமணம் சென்னையில் நேற்று திரைபிரபலங்கள் பலர் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடந்தது.
இவர்களது திருமண விழாவில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இயக்குநர் மணிரத்தனம், ரஜினி, ஷாருக்கான், அட்லி, போனிகபூர் , கார்த்தி , விஜய், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விக்கி-நயன் திருமணத்தை காண கேரளாவில் இருந்து 700 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 4 மாத கர்ப்பிணி பெண்ணின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
நயன்தாராவின் ரசிகை ஒருவர் கேரளாவிலிருந்து நயன்தாராவின் திருமணத்தை பார்ப்பதற்காக இரவு 8 மணிக்கு திருமணம் நடைபெற்ற நட்சத்திர விடுதிக்கு தனது கணவனுடன் வந்தார்.
எனக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்ததாக தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரது கணவர் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு உள்ளார்.
4 மாத கர்ப்பிணி மனைவி பயணம் செய்யலாமா எனக் கேட்டு மருத்துவரின் ஆலோசனையின் படி அவர் கேரளாவில் இருந்து சென்னை மாமல்லபுரம் வரை இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியை அழைத்து வந்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலுவாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட ஸ்ருதி-சரத் தம்பதியினர் 13 மணி நேர பயணத்திற்கு பிறகு இரவு சென்னையை வந்தடைந்ததாக தெரிவித்தார்.
தாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறிய அவர்கள், தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இங்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.
நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது அதனால் எனது கணவரிடம் தெரிவித்தேன்.
அவரும் சம்மதித்து என்னை கூட்டி வந்து விட்டார் என்றார் கர்ப்பிணி.
மேலும் அவர்களை பார்க்க முடியாவிட்டால் வருத்தம் ஏதும் இல்லை ஆனால் பார்த்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்ததுடன் இங்கு வந்ததே மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அங்கேயே சில மணிநேரம் காத்திருந்த தம்பதி விக்னேஷ் சிவன் நயன்தாரா வை பார்க்க முடியாததால் புறப்பட்டு சென்றனர்.
