Connect with us

  கணவருக்கு கிட்னி ஃபெயிலியர்; வேலைக்கு சென்று மாதம் 20 ஆயிரம் செலவு செய்து கணவனை காப்பாற்றும் மனைவி..😢 ஒரு நிமிடத்தில் தப்பா நினைச்சிட்டோமே..! இவர்களுக்குள் இப்படி ஒரு சோகமா?🥺

  Seeniraja barathi

  Tamil News

  கணவருக்கு கிட்னி ஃபெயிலியர்; வேலைக்கு சென்று மாதம் 20 ஆயிரம் செலவு செய்து கணவனை காப்பாற்றும் மனைவி..😢 ஒரு நிமிடத்தில் தப்பா நினைச்சிட்டோமே..! இவர்களுக்குள் இப்படி ஒரு சோகமா?🥺

  விஜய் டிவியில் கடந்த வாரம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி இதனால் வரும் பிரச்சினை பற்றி பேசப்பட்டது.

  அதில் அதிகம் விமர்சிக்கப்பட்டது ஒரு ஜோடி.

  Seeniraja barathi

  அப்பாவி கணவரும், அலட்சியமாக பதிலளித்த மனைவியாலும் சமூக வலைதளங்களில் மனைவி அதிகமாக விமர்சிக்கப்பட்டார்

  இதில் பேசிய பாரதி என்னும் பெண் தன் கணவர் குறித்து சில விஷயங்களை கூறினார்.

  தனது மகள் சிறுபிள்ளையாக இருந்த போது தந்தையிடம் ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து வாங்கினார்.

  ஆனால் வளர்ந்த பிறகு அவர் தன்னிடம் தான் கையெழுத்து வாங்குகிறார். தன் கணவருக்கு எழுத படிக்கத் தெரியாது, ரிப்போர்ட் கடை வாங்கி ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பார்.

  ஏபிசிடி யை எழுத்துக்கூட்டி படித்துக் கொண்டிருப்பார் என்று கூறினார்.

  இது அரங்கில் இருந்தவர்கள் மட்டுமல்லாது இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

  பலரும் அந்தப் பெண்ணிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

  தற்போது பேட்டி ஒன்றை அளித்த அந்த பெண் ஆரம்பத்தில் மீம்ஸ்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.

  ஆனால் ஒரு கட்டத்தில் தமக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் அழுகையே வந்துவிட்டது என்று கூறினார்.

  அவர்கள் அளித்துள்ள பேட்டி பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

  அந்த கணவரின் பெயர் சீனி ராஜா. அவர் மனைவியின் பெயர் பாரதி.

  தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த இவர் 2002ம் ஆண்டு சென்னைக்கு மளிகை கடையில் வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

  அங்கு மளிகை கடையில் இருந்து விலகி, தனியாக முட்டை கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

  பின்னர் அரிசி கடை, தக்காளி வியாபாரம், மளிகை கடை என்று ஒவ்வொன்றாக வைத்து அனைத்திலும் நஷ்டம் ஏற்படவே மீண்டும் ஒரு மளிகை கடைக்கு வேலைக்கு திரும்பி இருக்கிறார்.

  இதற்கிடையே ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கும் அவருக்கு பாரதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

  திருமணத்திற்கு பின்னர் மனைவியின் நகைகள் ஒவ்வொன்றாக வாங்கி வங்கியில் அடகு வைத்தது ஒவ்வொரு புதிய தொழிலை தொடங்கி இருக்கிறார்.

  ஆனால் எடுத்த தொழில் அனைத்துமே நஷ்டத்தில் முடிந்துள்ளது.

  பின்னர் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் தனது மனைவியை வேலைக்கு அனுப்பி இருக்கிறார் சீனி ராஜா.

  குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்குச் சென்ற அவரின் மனைவி பாரதிக்கு, பின்னாளில் கட்டாயமாக வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

  அதற்கு முக்கிய காரணம் சீனி ராஜாவின் உடல்நிலை.

  சீனி ராஜாவிற்கு கிட்னி இரண்டும் சுருங்கிய காரணத்தினால் அவருக்கு வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இதற்காக வாரம் இரு முறை அவர் டயாலிசிஸ் செய்து வருகிறார். டயாலிசிஸ் செய்யவும், மருந்து மாத்திரைகளுக்கும் சீனி ராஜாவிற்கு மாதம் 20 ஆயிரத்திற்கு மேல் தேவைப்படுகிறது.

  உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் மளிகை கடை வேலைக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார்.

  இதனால் குடும்ப பாரம் முழுவதையும் மனைவி பாரதி சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

  இதனால் பாரதியின் குடும்பத்தினர் யாரும் சீனி ராஜாவிடம் பேசுவதில்லை.

  தன்னுடைய அப்பா தன்னுடைய மருத்துவ செலவிற்கு பணம் கொடுக்கிறார்.

  மேலும் அப்பாவும் மனைவியும் இல்லை என்றால் நான் இல்லை, என் வீட்டின் முதுகெலும்பாக என் மனைவி தான் இருக்கிறார் என்று சீனி ராஜா அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

  வீட்டில் எப்போதும் போல சகஜமாகத்தான் என் மனைவி பேசினார். ஆனால் அவர் மீது வரும் விமர்சனங்களும், மீம்ஸ்களும் வேதனை அளிப்பதாக சீனி ராஜா தெரிவித்தார்.

  தன்னை நம்பி வந்த மனைவியையும், உட்கார வைத்து சாப்பாடு போட வேண்டிய வயதில் தன் தந்தை தனக்கு உதவி செய்து கொண்டிருப்பதையும் நினைத்து சீனி ராஜா கண் கலங்கினார்.

  மேலும் பாரதி பேசும் பொழுது தன்னுடைய நகைகள் அனைத்தும் கடனில் மூழ்கி போய்விட்டது.

  அதனால் தனக்கு சில சமயங்களில் இந்த வாழ்க்கை மீது வெறுப்பு வந்ததாக கூறினார்.

  மேலும் தான் கணவரிடம் வீட்டில் அடிக்கடி விளையாட்டாக பேசியதை தான் நிகழ்ச்சியில் பேசினேன்.

  ஆனால் நிகழ்ச்சி என்பதால் அது பூதாகரமாகிவிட்டது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

  குடும்பத்தை தனது ஒற்றை வருமானத்தால் நடத்திக் கொண்டு, தனது கணவரின் மருத்துவ செலவையும் பார்த்துக் கொண்டு இருக்கும் பாரதியை ஒரு நிமிடத்தில் வில்லியாக மாற்றி விட்டது இந்த சமூகம்.

  Continue Reading
  To Top
  error: Content is protected !!