Connect with us

    “அடப்பாவமே! கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது; அதுக்குள்ள இப்படியா” – இளம்பெண் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்..!!

    Newly married girl malathi

    Tamil News

    “அடப்பாவமே! கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது; அதுக்குள்ள இப்படியா” – இளம்பெண் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்..!!

    கோவை மாவட்டம்
    பேரூர் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் ஆறே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Newly married girl malathi

    கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் மாலதி (வயது 21).

    இவர், காளியண்ணன் புதூரை சேர்ந்த தனது உறவினர் பார்த்திபன் (வயது 25) என்பவரை காதலித்து வந்தார்.

    பார்த்திபன் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களின் காதலுக்கு மாலதியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த னர்.

    இதனால் மாலதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.

    அவர்கள் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    காதலித்து திருமணம் செய்திருந்தாலும், திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    தனது மாமியார் ருக்மணியை பார்க்க கூடாது, அங்கு செல்லக்கூடாது என பார்த்திபன் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

    இதனால் மனஉளைச்சலில் தவித்த மாலதி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் காளியண்ணன்புதூர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தகவல் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் கணவன் பிரபாகரன், மாமியார் முருகாத்தாள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், வருவாய் கோட்டாச்சியர் இளங்கோவன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!