Tamil News
“திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு; அதுக்குள்ள இப்படியா” – புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
திருமணம் ஆன 15 நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சோமனூர் பகுதியைச் சேர்ந்த கவுரப்பன் மகன் மதன்குமார் (வயது35).
இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சரசு மகள் பிரியங்கா (31) என்பவருக்கும் இடையே கடந்த 16-ம் தேதி வெள்ளிச்சந்தை பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் திருமணமான நாளில் இருந்தே பிரியங்காவும், மதன்குமாருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவரிடம் பிரியங்கா சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இருப்பினும் பிரியங்கா நாளடைவில் சரியாகி விடுவார் என மதன்குமார் நினைத்து வந்தார்.
கடந்த 25-ம் தேதி பிரியங்கா தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் அவரது சகோதரர் கதவை உடைத்து காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு இருவரும் நேற்று விருந்திற்காக வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு பிரியங்கா சென்னம்மாள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் அங்கிருந்த இரும்பு கம்பி மீது பிரியங்கா தலை மோதியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.
உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிரியங்கா உயிரிழந்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து புதுப்பெண் பிரியங்காவின் குடும்பத்தினர் காரிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான 15 நாளில் மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
