Uncategorized
பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த காதல் ஜோடி கடிதம் எழுதி வைத்து விட்டு எடுத்த விபரீத முடிவு..!!
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடி பகுதியைச் சேர்ந்த திருப்பதி – சந்தியா தம்பதியருக்கு 3 பெண்கள், சரண் என்ற மகனும் உள்ளனர்.
இவர் குடும்பத்துடன் திருப்பூர் வீரபாண்டி, பழகாரர் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் சரண் (18) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டி ஃபார்ம் (மெடிக்கல்) முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது தூரத்து உறவான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த வினிதா (18) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த, இரு மாதங்கள் முன்பு, தனது காதலியை அழைத்து வந்து திருமணம் செய்து, திருப்பூர் மாவட்டம் இடுவாயில் தங்கியிருந்தார்.
இதனிடையே, சரண் இன்ஸ்டாகிராமில் தனக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட சரணின் சகோதரி இருவரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார்.
இருவரும் சரணின் வீட்டிற்கு சென்ற நிலையில் வினிதாவின் தந்தை வீரமுத்து தனது மகளை காணவில்லை என கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த வழக்கு தொடர்பாக சரணின் வீட்டாருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சரணின் தந்தை படிக்கும் வயதில் எதற்கு திருமணம், படித்து முடியுங்கள் நானே திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்து விட்டு புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, தன்னால் தனது குடும்பத்தினருக்கு பிரச்சினை வருவதாக எண்ணிய சரண், வினிதா இருவரும் தங்களை பிரித்து விடுவார்களோ என எண்ணி கடிதம் எழுதி வைத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
