Tamil News
திருமணமான ஒரேமாதத்தில் புது மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..!
ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தனுசியாவுக்கும் (20), வாத்தியார்விளையைச் சேர்ந்த செல்வமூர்த்திக்கும் (34) கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் தனிப்பட்ட பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த தனுசியா அடிக்கடி பெற்றோருக்கு போன் செய்து குறையை சொல்லி வந்துள்ளார்.
பெற்றோரும் அவரை சமாதானப்படுத்தி வந்தனர்.
கொத்தனாரான செல்வமூர்த்தி வேலைக்கு சென்ற போது வீட்டில் தனுசியா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
வேலை முடிந்து செல்வமூர்த்தி வீட்டுக்கு வந்தபோது தனுசியா தூக்கில் பிணமாக தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கதறி அழுத செல்வமூர்த்தி போலீசுக்கும், தனுசியாவின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த வடசேரி போலீசார் தனுசியாவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனுசியாவின் தற்கொலை குறித்து அவரது பெற்றோர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பெண் ஒரே மாதத்தில் இறந்துள்ளதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.
