Tamil News
விடிந்தால் திருமணம்; மணப்பெண் எடுத்த விபரீத முடிவால் கதறி அழுத மணமகன்..!
நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் எடுத்த விபரீத முடிவால் பெரும் திருமண வீட்டாரிடையே பெரும் சோகம் ஏற்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நான்காம்சேத்தி கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் தேவதர்ஷினி (21).
இவருக்கும், கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற இருந்தது.
இதற்கு இரு குடும்பத்தினரும் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் புதுப்பெண் தேவதர்ஷினி தனது வீட்டில் உள்ள அறையில் சென்று கதவை மூடிக்கொண்டார்.
நீண்ட நேரமாக அறையை திறக்காததால் குடும்பத்தினர் உடைத்துச்சென்று பார்த்தப்போது, புதுப்பெண் தேவதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.
மேலும் மணமகன் வீட்டாரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உறவினர்கள் தூக்கில் தொங்கிய தேவதர்ஷினியை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை அறிந்த கோட்டூர் போலீசார் சம்பவட இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தூக்கிட்டு உயிரிழந்த தேவதர்ஷினியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கோட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு முதல் நாள் புதுமண பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
