Tamil News
அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்களை அழித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்; கதறி அழுத விவசாயிகள்..!!
நான்கு ஐந்து தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி அழித்து நாசம் செய்தனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
தமிழகத்தில் நீர்பிடிப்பு ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாவட்டம் தோறும் துரிதமாக வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்று வருகிறது
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்காவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை பொதுப்பணித்துறையினர் அழித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பல்லமுள்வாடி பகுதியில் வசித்து வருபவர் பாலு.
இவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விளை நிலம் அப்பகுதியில் உள்ளது.
அந்த நிலத்தை ஒட்டிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர் நிலை கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துந்துள்ளார்.
இந்நிலையில் விவசாயி பாலு அந்த நிலத்தில் மூன்று மாத பயிரான ADT 37 ரக குண்டு நெற்பயிர் சாகுபடியை பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் யாரும் இல்லாத போது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டக்டர் இயந்திரம் மூலமாக பயிரிட்ட ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள நெற்பயிர்களை முழுமையாக அழித்து நாசம் செய்துள்ளனர்.
இன்னும் 4,5 தினங்கள் கால அவகாசம் வழங்கி இருந்தால் அறுவடை முடித்த பிறகு நாங்கள் அந்தப் ஆக்கிரமிப்பு பகுதியில் விவசாயம் செய்திருக்க மாட்டோம் என பாலு மற்றும் அவரது மனைவி அழிக்கப்பட்ட நெற்பயிர்களை கட்டி அணைத்து அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
