Tamil News
ஓட்டிப் பார்த்து விட்டு வாங்குகிறேன் என கூறி பைக்கை வாங்கிச் சென்ற முதியவர் திரும்பி வராததால் கடைக்காரர் அதிர்ச்சி..!!
வேளாங்கண்ணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி முதியவர் ஒருவர் பைக்குடன் சென்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
இவர் வேளாங்கண்ணி ஆர்ச்சில் பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது கடைக்கு 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் வாங்க வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்ட பின்னர் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் மிகவும் பிடித்து போகவே அதன் விலை உள்ளிட்ட மற்ற விபரங்களை கேட்டுள்ளார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த மூர்த்தி ஓட்டிப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளை கொடுத்துள்ளார்.
ஆனால், மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்ற முதியவர் வெகுநேரமாகியம் திரும்பி வரவில்லை.
அதன் பிறகு தான் முதியவர் தன்னை ஏமாற்றி விட்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்றது மூர்த்திக்கு தெரியவந்தது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி இங் சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
