Tamil News
நடக்க முடியாத தாய்; இழுத்து கொண்டு வந்து பஸ் ஸ்டாண்டில் விட்டுச் சென்ற மகன்; ஆதரிக்க யாரும் இன்றி கதறி அழுத சோகம்..!!
நடக்க முடியாமல் உள்ள தாயை பெற்ற மகன் இழுத்து கொண்டு வந்து பஸ் ஸ்டாண்டில விட்டு சென்ற சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவள்ளுவாயில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி காமாட்சி.
வயதான இவருக்கு இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர்.
தமது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் இளைய மகன் ஆறுமுகத்துடன் மூதாட்டி காமாட்சி தனது சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பெற்ற தாயை கவனிக்க முடியாததால் மகன் ஆறுமுகம் கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி தனது தாயை அழைத்து வந்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் தனது மகன் தன்னை அழைத்து செல்ல வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் மூதாட்டி கதறி அழுது கொண்டிருந்தார்.
இறுதியில் 5 பிள்ளைகளும் கைவிட்டதை அறிந்து தனது வயிற்றில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை கிருஷ்ணகிரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
நடக்க முடியாமல் உள்ள தாயை பெற்ற மகன் வீதியில் விட்டு சென்ற சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.
