World News
ஒரு வீட்டின் விலை ரூ 87 மட்டுமே; ஆனால், யாரும் வாங்க தயாரில்லை; எங்கு தெரியுமா..??
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக உள்ளது. நமது நாட்டில் சொந்த வீடு வாங்கவேண்டும் என்றால் பல லட்சங்கள் தேவைப்படும்.
ஆனால் இத்தாலியில் வெறும் ரூ.87 க்கு ஒரு வீடு வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான்.
இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரில் தான் ஒரு யூரோவுக்கு ( இந்திய மதிப்பில் ரூ.87 ) வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் இவ்வளவு குறைந்த விலைக்கு கூட யாரும் அந்த வீட்டை வாங்கவில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.
இத்தாலி நாட்டின் தென்மேற்கில் உள்ள சிசிலி நகரத்தின் சலேமி பகுதியில் குறைந்த விலை வீடுகள் அரசால் ஏலம் விடப்படுகின்றன.
1968ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பூ.க.ம்பத்திற்கு பிறகு, சலேமி நகரத்தின் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளது.
இதையடுத்து முன்பு போலவே நகரங்களில் மீண்டும் மக்கள் அதிக அளவில் இங்கு குடியேற வேண்டும் என்ற முயற்சியில், குறைந்த விலையில் அங்கு வீடுகள் விற்கப்படுகின்றன.
தற்போது வரை 400க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன.
ஆனால் வீடுகளை வாங்க யாரும் முன்வரவில்லை. விரைவில் இது சுற்றுலா நகராக மாறும் என, அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.
