Connect with us

    8 பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வரும் இளைஞர்; இரவானால் ஒரே கும்மாளம் தான் போல; வைரலாகும் புகைப்படம்..!!

    Ong Dam Sorot with his 8 wives in Thailand

    World News

    8 பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வரும் இளைஞர்; இரவானால் ஒரே கும்மாளம் தான் போல; வைரலாகும் புகைப்படம்..!!

    தாய்லாந்து நாட்டில் Ong Dam Sorot என்ற இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருவது இணையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Ong Dam Sorot with his 8 wives in Thailand

    திருமணம் என்பது மிகவும் சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாததாகி உள்ளது இன்றைய காலகட்டத்தில்.

    பெண் பார்ப்பது, பெண் பிடித்திருந்தால் ஜாதகம் பார்ப்பது இப்படி ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்கையில் பெண் சம்மதம் தெரிவிக்காது.

    பெண் சம்மதிக்கும் பட்சத்தில் வீட்டில் ஜாதகம் சரியாக இருக்காது.

    இதனால் தான் நிறைய இளைஞர்கள் வயது 40-ஐ தாண்டியும் திருமணம் செய்ய முடியாமல், தலையில் வழுக்கை விழுந்து புலம்பி தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    ஆனால், தாய்லாந்து நாட்டிலோ இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

    இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    தாய்லாந்து நாட்டை சேர்ந்த Ong Dam Sorot என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார்.

    இவர் 8 பெண்களை வரிசையாக திருமணம் செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

    இதில் என்ன அதிசியம் என்றால் 8 பெண்களுக்கு இடையில் எந்தவித சண்டை, பொறாமை போன்றவை எதுவும் வராதாம்.

    Sorot 8 பெண்களை திருமணம் செய்த காதல் கதையை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

    அதாவது Sorot, தனது அனைத்து மனைவிகள் மீது அளவு கடந்த காதல் வைத்துள்ளாராம்.

    Ong Dam Sorot with his 8 wives

    8 மனைவிகளை பார்த்த இடத்திலேயே அவரது மனதை பறிகொடுத்துள்ளார்.

    Sorot தனது முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்ததும் காதலில் விழுந்துள்ளார்.

    அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்து திருமணம் செய்தார்.

    அவரை திருமணம் செய்த பிறகு,  இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார்.

    நாங் எல்லிற்கு Sorot முதல் திருமணம் குறித்து தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துவிட்டார்.

    மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை  இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    7வது மனைவியை திருமணம் செய்தது மிகவும் சுவாரஸ்யம் தான்.

    தனது  தாயுடன் கோயிலுக்கு செல்லும் போது நோங் ஃபில் என்பவரை பார்த்துள்ளார்.

    எட்டாவது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க சுற்றுலா சென்றிருந்த போது பார்த்ததும் காதல் தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்து அதன் பிறகு ஏழு மனைவிகளின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்.

    தற்போது இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

    Sorot தனது அழகான 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரராகி வருகின்றது.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!