Connect with us

    “டாக்டர், ஐ லவ் யூ” – அரசு மருத்துவமனை பெண் டாக்டரிடம் நோயாளி ஒருவர் காதலை வெளிப்படுத்த; அதிர்ச்சியில் டாக்டர் செய்த தரமான செயல்..!!

    Tamil News

    “டாக்டர், ஐ லவ் யூ” – அரசு மருத்துவமனை பெண் டாக்டரிடம் நோயாளி ஒருவர் காதலை வெளிப்படுத்த; அதிர்ச்சியில் டாக்டர் செய்த தரமான செயல்..!!

    கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்த பெண் டாக்டரிடம் நோயாளி ஒருவர் காதலை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Youth expresses love to lady

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இதனால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார் அந்த பெண் டாக்டர்.

    மற்ற நோயாளிகள் வரிசையில் காத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென வந்த வாலிபர் ஒருவர், அந்த பெண் டாக்டரிடம், ‘நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?’ என கேட்டுள்ளார்.

    இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் டாக்டர், யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும் வெளியே செல்லுங்கள்’ என கூறியுள்ளார்.

    இதை ஏற்க மறுத்த அந்த வாலிபர், ‘காதலிக்கிறீர்களா? இல்லையா? என கூறினால் மட்டுமே செல்வேன்’ என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் உடனடியாக அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் கடலூர் வெள்ளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் எதற்காக அந்த பெண் டாக்டரிடம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!