Connect with us

    மத்திய அரசின் மாதம் ரூ.3000 பென்சன் பெறும் திட்டம்… இதில் இணைய நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!!

    Tamil News

    மத்திய அரசின் மாதம் ரூ.3000 பென்சன் பெறும் திட்டம்… இதில் இணைய நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!!

    மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம் மூலமாக உங்களது ஓய்வூதிய காலத்திற்கு பின்னர் மாதம் பென்சன் தொகை ரூ.3000 கிடைக்கும்.

    இது குறித்த விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

    உங்களது ஓய்வுக் காலத்தில் கையில் பணம் இருக்குமா என்று உங்களுக்குத் தெரியாது. இப்போது அதற்காக நீங்கள் சேமிக்க வேண்டும்.

    அப்போதுதான் கடைசிக் காலத்தில் எவ்வித கஷ்டமும் இல்லாமல் வாழமுடியும்.

    பென்சன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகை ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வந்துகொண்டிருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட்ட நிறைய திட்டங்கள் இப்போது செயல்பாட்டில் இருக்கின்றன.

    மத்திய அரசே இதுபோன்ற பல திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் நீங்களும் மாதம் ரூ.3000 பென்சன் பெற மத்திய அரசு, பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா என்ற அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் சேமித்தாலே கடைசி காலத்தில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் பென்சன் வந்து கொண்டே இருக்கும்.

    குறிப்பாக இந்த திட்டம் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 18 முதல் 40 வயது வரை உள்ள இந்தியர்கள் இணைந்து கொள்ளலாம்.

    இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு பொதுச் சேவை மையங்கள் மூலமாக கணக்கு தொடர முடியும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.

    கணக்கு தொடங்கிய பின்னர் கார்டு ஒன்றும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் சேமிக்கலாம்.

    உங்களுக்கு 60 வயது ஆன உடன் பென்சன் வழங்கப்படும்.
    ஒரு மாதத்துக்கு 55 ரூபாய் சேமிப்பதாக இருந்தால் 42 வருடங்களுக்கு இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும்.

    இதன்படி உங்களது முதலீட்டுப் பணம் ரூ.27,720 ஆக இருக்கும். நீங்கள் விரும்பினால் மாதாந்திர பென்சனுக்குப் பதிலாக, வருடாந்திர பென்சனாக ரூ.36,000 பெறலாம்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!