Tamil News
திருட்டையே தொழிலாக கொண்ட கிராமத்தினர்; பங்களா வீடு கட்டி ராஜ வாழ்க்கை வாழும் வினோதம்…!!
பீகாரில் உள்ள கிராமமொன்றில் கிராமத்தினர் அனைவருமே திருட்டு தொழில் செய்து பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இந்த கிராமத்திலிருந்து இயங்கும் திருட்டுக் கும்பலானது, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி தனது திருட்டுப் பணியை அயராது செய்து வருகின்றன.
பீகாரின் ககிகார் மாவட்டம் கோதா பகுதியில் ஜீரப்கஞ்ச் என்ற கிராமம் உள்ளது,
சுமார் 1500 -க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த கிராமத்தில் அனைவருமே திருடர்கள்.
திருட்டை மட்டுமே தங்களது முழுநேர தொழிலாக செய்து வருகின்றனர்.
தங்களது பிள்ளைகளுக்கும் கல்வியை கற்றுக்கொடுக்காமல் திருட்டு குறித்து பாடம் எடுக்கின்றனர்.
முதலில் சிறு சிறு திருட்டாக தொடங்கி வங்கி, வீடு என இவர்கள் தங்கள் திருட்டு தொழிலை விரிவுபடுத்துகின்றனர்.
இதனால் இவர்களிடம் பணப்புழக்கம் அதிகளவில் காணப்படுகிறது.
பணம் புரள புரள பங்களா வீடு கட்டி சொகுசாக ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களது குலதெய்வத்துக்கு பூஜை செய்து வழிபட்டுவிட்டு திருட்டு தொழிலில் களமிறங்குவது தான் வழக்கம்.
இதேபோல் திருடிய பணத்தில் ஒரு பங்கை ஊர் தலைவரிடம் வழங்கி விடுவார்களாம்.
ஒருவேளை, திருட்டில் ஈடுபடும்போது, யாரேனும் பிடிபட்டால், நீதிமன்ற பிணைக்கு அந்தத் தொகை பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள், சந்தைக்கு வரும் போது ஏராளமான தங்க நகைகளை அணிந்தபடி, கையில் பெரும் தொகையுடன் வருவார்களாம்.
இந்த கிராமத்தில் திருட்டுக் கும்பலின் வாழ்க்கை முறையைப் பிடிக்காத சிலர், அந்த கிராமத்திலிருந்து தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு வெளியேறிவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவரங்கள் வெளி உலகுக்கு தெரியவர தற்போது குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
