Connect with us

    திருமணமான பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 போலீசார்; நேரில் பார்த்த பின் கதறிய கணவர்..!

    illegal love

    Viral News

    திருமணமான பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 போலீசார்; நேரில் பார்த்த பின் கதறிய கணவர்..!

    ராஜஸ்தானில் திருமணமாகி பிரிந்து சென்ற மனைவியுடன் ஓட்டலில் 3 காவலர்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன், இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    illegal love

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் ஒருவர், 2015ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    அதன் பிறகு, இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் கடந்த 2019ம் ஆண்டு முதல் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே, அந்தப் பெண் தனது கணவர் மீது குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில் தனது மனைவியுடன் சில போலீஸ்காரர்கள் ஒரு ஓட்டலில் உல்லாசமாக இருப்பதாக அந்த விரிவுரையாளருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் அந்த ஓட்டலுக்கு சென்று பார்த்தவுடன், தனது மனைவியும், 3 மூன்று போலீசாரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    அவர்கள் ஒன்றாக இருந்ததை அவர் வீடியோ எடுத்துள்ளார்.

    இதுகுறித்து விரிவுரையாளர் கூறுகையில்,

    ‘என் மனைவி என்னிடம் தகராறு செய்து கொண்டு மைகாவில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    மாதந்தோறும் ஜீவனாம்ச தொகை பெற்று வருகிறார்.

    எனது மனைவியை 3 கான்ஸ்டபிளுடன் ஓட்டலில் இருப்பதை பார்தேன்.

    இதுதொடர்பாக பார்மர் எஸ்பியை சந்தித்து புகார் அளிக்க எஸ்பி அலுவலகம் வந்தேன்.

    ஆனால், ​​அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் எனது வாகனத்தை வழிமறித்து தாக்கினர்.

    பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எஸ்பி அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தேன்.

    பலோத்ரா காவல் நிலைய காவலர் சந்தீப் சவுத்ரி மற்றும் மேலும் இரு போலீஸ்காரர்கள் எனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தனர்.

    எனவே மூன்று போலீஸ் கான்ஸ்டபிள்கள் மீதும் துறை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன்’ என்றார்.

    இவ்விவகாரம் குறித்து பார்மர் எஸ்பி தீபக் பார்கவா கூறுகையில், ‘விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையுடன், வழக்குப் பதிவு செய்யப்படும்’ என்றார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!