Connect with us

    “தமிழன்னையை கொச்சை படுத்தி விட்டார்” – ஏ.ஆர்.ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்..!

    AR Rahman Tamil Annai

    Tamil News

    “தமிழன்னையை கொச்சை படுத்தி விட்டார்” – ஏ.ஆர்.ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்..!

    ‘இழிவாக வரையப்பட்ட தமிழன்னையின் படத்தை, சமூக வலைதளத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    AR Rahman Tamil Annai

    சென்னையில் வசித்து வருபவர் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகியான முத்து ரமேஷ் நாடார்.

    இவர், ‘ஆன்லைன்’ வாயிலாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அந்த புகாரில் கூறி இருப்பதாவது:

    உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி, சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    தமிழறிஞர்கள் பலர், தமிழன்னை படங்களை அழகாக, தெய்வமாக வெளியிட்டுள்ளனர்.

    அவற்றில், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற நுால்கள், தமிழன்னையின் கரங்களில் செங்கோல்களாய் காட்சி அளிக்கின்றன.

    ஆனால், இசையமைப்பாளர் ரஹ்மான், தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    இது, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல்.

    தமிழர்கள் தெய்வமாக வழிபடும், தமிழன்னையின் கொச்சையான படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!