Tamil News
ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய்; அலைமோதிய மக்கள் கூட்டம்; எங்கு தெரியுமா..?? நம்ம இந்தியாவுல தாங்க..!!..!!
பெட்ரோல், டீசல் விலை லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு லி்ட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பெட்ரோலை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியதையடுத்து, போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16 நாட்களில் 14 முறை உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது
இது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்கள் தற்போது தான் ஓரளவு மீண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் டீ காபி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120வரை உயர்ந்துவிட்டதால் நடுத்தரக குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் அந்த மக்களுக்கு மிகப்பெரிய நம்மதி அளிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூரில் நேற்று ஒருநாள் மட்டும் பெட்ரோல் லிட்டர் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி நேற்று குறிப்பிட்ட பெட்ரோல் பங்க் அருகே கூட்டம் அலைமோதியது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்த நூதன திட்டத்தை செயல்படுத்தியதாக அந்த தனியார் அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
2008 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் இருந்ததைப் போல தற்போதும் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உயர்ந்து வருகிறது.
இதனால் உலக நாடுகள் அனைத்துமே பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றன.
எரிபொருள் உயர்வு காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிப்பதாகவும், இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாகவும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து பேசிய அந்த அமைப்பின் உறுப்பினர் மகேஷ் சர்வகோடா “நாட்டின் பணவீக்கம் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது.
பெட்ரோல் விலை 120 ரூபாயை தொட்டுவிட்டது.
ஆகவே அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் பொதுமக்கள் சிலருக்கு மகிழ்ச்சி அளிக்கலாம் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்தோம்.
ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தர முடிவெடுத்தோம்” என்றார்.
ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
