World News
காதலனை தேடி இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ். 48 வயதான அவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதான ரைசல் என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்சில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த ரைசல், ஹாரிஷை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து 10 நாட்களாக, பெங்களூரு பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று இருவரும் ஹாரிஸின் சொந்த ஊரான எர்ணாகுளம் செல்வதற்காக பெங்களூருவில் இருந்து ரயிலில் புறப்பட்டுள்ளனர்.
ரயில் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ரயில் நிலையத்தை கடந்தவுடன், ரைசல் ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஹாரிஸ் ஓமலூர் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து இறங்கி மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ரைசல் சுமார் 50 அடிபள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார், ரயிலில் இருந்து விழுந்து இறந்ததால் உடனடியாக தர்மபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே எஸ்ஐ கோதண்ட ராமன் மற்றும் போலீசார், ரைசல் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவரது கணவர் ஹாரிஷி டம் விசாரித்து வருகின்றனர்.
ஹரிஷ் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்தது அவரது அவரது குடும்பத்திற்கு தெரியாமல் இருந்தது.
இதனால் கணவரை கட்டாயப்படுத்தி எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார் ரைசல்.
அப்போதுதான் போகும் வழியில் உயிரிழந்தார்.
ஊருக்கு சென்றால் திருமண வாழ்க்கை பற்றி குடும்பத்தினரிடம் எவ்வாறு தெரிவிப்பது என்று குழப்பத்தில் இருந்த ஹாரிஸ் மனைவியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டு பெண் ஒருவர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
