Connect with us

    37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்; பயத்தில் அலறி துடித்த பயணிகள்..!!

    Pilots Fall Asleep While Flying

    World News

    37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்; பயத்தில் அலறி துடித்த பயணிகள்..!!

    Pilots Fall Asleep While Flying

    கார், லாரி, பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது தூங்கினார்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

    ஆனால் விமானத்தை ஓட்டும் போது விமானத்தின் பைலட் தூங்கிய சம்பவத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

    இதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஆப்பிரிக்க நாட்டில் தற்போது நடந்துள்ளது.

    சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது.

    இந்த விமானம் நடுவானில் 37 ஆயிரம் படி பறந்து கொண்டிருந்த போது விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இயங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கி விட்டனர்.

    இதனால், விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டி சென்றது.

    இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.

    ஆனால், இதில் பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலித்து இருக்கிறது.

    அதன்பிறகே விழித்த விமானிகள் இருவரும் விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர்.

    இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!