Connect with us

    “கருப்பு நிற தாளை கழுவினால், இரண்டு லட்ச ரூபாய் நல்ல ரூபாய் நோட்டுகள்” – வித்தியாசமாக ஏமாற்றிய கும்பல்..!!

    Fraud group

    Tamil News

    “கருப்பு நிற தாளை கழுவினால், இரண்டு லட்ச ரூபாய் நல்ல ரூபாய் நோட்டுகள்” – வித்தியாசமாக ஏமாற்றிய கும்பல்..!!

    கருப்பு நிற தாள்களை கழுவினால், இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் என ஏமாற்றி, ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    Fraud group

    கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ள மேட்டுக்குப்பம் ஆசிரமத்தில் சமையல் வேலை செய்து வருகிறார் ராமசாமி.

    இவர் தனது நண்பர் தமிழ் என்பவரிடம் தன்னிடம் கருப்பு நிறத்தில் காகிதங்கள் இருப்பதாகவும், அதனை தண்ணீரில் கழுவினால் அவை நல்ல ரூபாய் நோட்டுகளாக மாறும் என கூறியிருக்கிறார்.

    மேலும் அதனை மாற்றித் தரும்படியும் ராமசாமி கூறியதாக தெரிகிறது.

    இதனையடுத்து ராமசாமி சொன்னதை நம்பிய தமிழ், தனக்குத் தெரிந்த சிலரை ராமசாமி வரச் சொன்ன இடத்திற்கு கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறார்.

    அங்கு தன்னிடமிருந்த கருப்பு நிற தாளை தண்ணீரில் கழுவி அது நல்ல ரூபாய் நோட்டாக மாறுவதை ராமசாமி காட்டியிருக்கிறார்.

    இதனை நம்பிய தமிழ் மற்றும் அவரது நண்பர்கள் அந்த கருப்பு நிற தாள்களை வாங்க சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

    மேலும் ராமசாமி தன்னிடம் இதுபோல பல கருப்பு தாள்கள் இருப்பதாகவும் அதை கழுவினால் உண்மையான ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் எனவும் அதை பிறரிடம் குறைந்த விலைக்கு பெற்றுத் தரும்படியும் கூறியிருக்கிறார்.

    உண்மையான ரூபாய் நோட்டுகள் மீது கருப்பு மை அயோடின் சிங்கர் மற்றும் சோடா உப்பு கலவை தடவப்பட்டு பிறகு அந்த தாளை தண்ணீரில் கழுவும்போது அதன் மேல் உள்ள கருப்பு நிறம் மறைந்து உண்மையான ரூபாய் நோட்டு தெளிவுடன் காட்சியளிக்கும்.

    இதனை காட்டி போலியான தாள்களை ராமசாமி விற்க முயன்றுள்ளார்.

    இதனிடையே ராமசாமியின் ரகசிய திட்டம் குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் ராமசாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 112 கருப்பு நிற ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததாக காவல் துறை தெரிவித்திருக்கிறது.

    அதில் ஐந்து நோட்டுகள் மட்டுமே நல்ல ரூபாய் நோட்டுகள் எனவும் மற்றவை போலியானது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்ணீரில் கழுவினால் நல்ல ரூபாய் நோட்டு கிடைக்கும் என கூறி பொது மக்களிடம் போலியான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சித்த கும்பல் கைது செய்யப்பட்டிருப்பது கடலூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!