Tamil News
“வயசான ஆண்களாக பாரு; அப்ப தான் நமக்கு சேஃப்டி” – இளம்பெண்களை வைத்து விபரீத செயல்கள் செய்த கும்பல்; அதிர்ந்து போன போலீசார்..!
திருமண கமிஷன் பணத்துக்காக வயதானவர்களாக பார்த்து திருமணம் செய்து விட்டு பண மோசடி செய்யும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35).
இவர் கைத்தறி நெசவு வேலை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்ய விருப்பப்பட்ட இவரது பெற்றோர், பல இடங்களில் பெண்பார்த்து வந்திருக்கின்றனர்.
ஆனால், பெண் கிடைக்காததால் பல புரோக்கர்கள் மூலமாக பெண் தேடி வந்திருக்கின்றனர்.
இதனால், புளியம்பட்டி, பரிசாபாளையத்தை சேர்ந்த மலர், அந்தியூரை சேர்ந்த மற்றொரு பெண், கோபியை சேர்ந்த தங்கமணி, திண்டுக்கல்லை சேர்ந்தஇதனால், புளியம்பட்டி, பரிசாபாளையத்தை சேர்ந்த மலர், அந்தியூரை சேர்ந்த மற்றொரு பெண், கோபியை சேர்ந்த தங்கமணி, திண்டுக்கல்லை சேர்ந்த முத்துக்காளை, சாத்தூரை சேர்ந்த முத்து, விருதுநகர் மாவட்டம் சூளைக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி, கவுந்தப்பாடியை சேர்ந்த பாப்பாள், ஈரோட்டை சேர்ந்த சரவணன் ஆகிய 8 புரோக்கர்களை குடும்பத்தினர் நாடினர். சேர்ந்த விஜயலட்சுமி, கவுந்தப்பாடியை சேர்ந்த பாப்பாள், ஈரோட்டை சேர்ந்த சரவணன் ஆகிய 8 புரோக்கர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
இறுதியில் பரிசபாளையத்தை சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா (27) என்ற பெண்ணின் விபரம் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து பெண்பார்க்க சென்றபோது சரவணனுக்கு சரிதாவை பிடித்துப் போயிருக்கிறது.
அப்போது சரிதாவின் குடும்பம் குறித்து விசாரிக்கையில் அவரது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) ஆதரவாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், திருமண புரோக்கருக்கு 1.2 லட்ச ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும் என விஜயலெட்சுமி தெரிவிக்க, மாப்பிள்ளை வீட்டாரும் வேறு இடத்தில் கடன் வாங்கி கொடுத்திருக்கின்றனர்.
கடந்த 20.8.2022 அன்று சரவணன் தனது சொந்த ஊரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் சரிதாவை திருமணம் செய்தார்.
இதனையடுத்து, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.
திருமணம் முடிந்ததும் புரோக்கர் 8 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கமிஷனாக சரவணன் கொடுத்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சரிதா தனது பெரியம்மா விஜயலட்சுமிக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
ஒருநாள் மனைவியின் செல்போனை ஏதேச்சையாக சரவணன் பார்த்தார். அதில் அவரது பெரியம்மாள் விஜயலட்சுமிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டார்.
அதில், ‘‘இங்கு இருந்தால் 10 பைசா சேர்க்க முடியாது. நீ ஏதாவது சொல்லி என்னை ஒரு வாரத்துக்கு அழைத்துச்செல்.
நான் உடனே ஓடிப்போனா இவர் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்குவார். ரொம்ப பாசமாக இருக்காரு. அதனால் விட்டுட்டு போகவும் மனசு இல்லை.
இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் சொல்லிக்கலாம் என்ற முடிவில் இருக்கேன்.
அடுத்த ஆள் விபரம் தெரியாதவனாக அல்லது வயதானவனாக பாரு. திருமணமான 2 நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி இருக்கணும்’’ என்று பேசியிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், தனது நண்பர்களிடம் இதுபற்றி கூறி அழுது புலம்பியுள்ளார்.
இந்த மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க நினைத்திருக்கின்றனர் சரவணனும் அவரது நண்பர்களும்.
அதன்படி வாய்ஸ் மெசேஜ் குறித்து சரவணன் எதுவும் காட்டிக்கொள்ளாமல், சரிதாவிடம் நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும். உனது பெரியம்மாளை பார்க்கச்சொல் என்று கூறினார்.
அதன்படி சரிதா தனது பெரியம்மாளிடம் இது குறித்து தெரிவித்தார்.
அவர் கணவரை பிரிந்த ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்தார். ‘‘எனது நண்பருக்கு அந்த பெண் பிடித்துவிட்டது. மணப்பெண்ணை அழைத்து வந்தால் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம்’’ என்று சரவணன் கூறியுள்ளார்.
மேலும், புரோக்கர்களுக்கு ரூ.80 ஆயிரம் கமிஷனாக பேசப்பட்டது.
இதனையடுத்து விருதுநகரில் இருந்து நேற்று முன்தினம் விஜயா (36) என்ற பெண்ணை வாடகை காரில் பெரியம்மாள் விஜயலட்சுமி, தாசப்பகவுண்டன் புதூருக்கு அழைத்து வந்தார்.
உடனடியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களை கையும் களவுமாக சரவணன் பிடித்துள்ளார்.
திருமணம் செய்ய வந்த பெண்ணை விசாரித்தபோது அவர் கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்ச்சுனன் மனைவி விஜயா (36) என்பது தெரியவந்தது.
சரிதா உள்பட 3 பேரிடம் இருந்த செல்போனை வாங்கி விசாரித்தபோது இவர்கள் பெண் கிடைக்காதால் திருமணம் தாமதமாகி விரக்தியில் இருக்கு வயதான வாலிபர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களையும் குறிவைத்து திருமண கமிஷனுக்காக இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது
உடனடியாக இந்த கும்பலின் மீது பங்களா புதூர் காவல்நிலையத்தில் சரவணனனின் வீட்டார் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி, சரிதா மற்றும் மற்றொரு பெண் ஆகிய மூவரையும் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
