Tamil News
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தான் வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண்..!
சென்னை அண்ணா நகர் பகுதியில் வேலை செய்த வீட்டில், தங்கம், வைர நகை திருடி, அடமானம் வைத்து ஆடம்பர வாழ்க்கை நடத்திய பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா நகர் 7வது தெரு ஒய் பிளாக்கை சேர்ந்தவர் மகேஷ்வரன்(61).
இவரது வீட்டில், கடந்த 8ம் தேதி அன்று, இவரது வீட்டில், 30 சவரன் தங்க நகை 7 லட்சம் ரூபாய், வைரம், நான்கு கிலோ வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக மகேஷ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வீட்டில் வேலை பார்த்து வந்த பாடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுகுணா(36) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுகுணா, கடந்த 28ம் தேதி அன்று அண்ணா நகர் காவல் நிலையத்தில் சுகுணா சரணடைந்தார்.
இவருடன், இவருடைய கள்ளக்காதலன் மணலியை சேர்ந்த பாபு என்பவரும் கைதானார்.
விசாரணையில், நகை, பணம் திருடி, இவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்தியது தெரியவந்தது. அடமானம் வைக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.
இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
