Tamil News
திருமணமான பெண்ணை ஆசைவார்த்தை கூறி அவரை வைத்து விபச்சாரம் நடத்திய போலீஸ்காரர்..!
மதுரையில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட போலீஸ்காரர் தேவேந்திரன் மற்றும் காசி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு தல்லாகுளம் போலீசார் மகளீர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மதுரை மாநகர் கோ.புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டுக்கு வெளியில் கண்காணித்து வந்தனர்.
அதுமட்டுமின்றி அந்த வீட்டிற்கு சென்று மறைந்திருந்தும் கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தனர்.
அப்போது அவ் வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது.
பின்னர் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டபோது பெண் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அப்போது அந்த வீட்டில் 37 வயதுடைய ஒரு பெண் உட்பட மூன்று பேர் இருந்தனர், அவர்கள் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தான் இந்த தொழிலுக்கு வந்ததாகவும் தனது சூழலைப் பயன்படுத்திக் கொண்ட இருவர் தன்னை இந்த தொழிலுக்குள் தள்ளியதாகவும் கூறி அந்தப் பெண் கதறி அழுதார்.
அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் செல்லூர் பகுதியை சேர்ந்த காசி என்பது தெரியவந்தது.
இவர்களில் தேவேந்திரன் என்பவர் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில்
காவலராகப் பணியாற்றி வருகிறார் என தெரிய வந்தது.
இருவர் மீதும் தன்னை விபச்சாரத்தில் தள்ளியதாக அந்த பெண் புகார் கொடுத்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் காசி மற்றும் தேவேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசால் மகளீர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் விசாரணையில் சுமதி மற்றும் காவலர் தேவேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து விபச்சார விடுதி நடத்தி வந்ததும் அதற்கு புரோக்கராக ஆட்டோ ஓட்டுனர் காசி செயல்பட்டதும் தெரிய வந்தது.
மேலும் நேற்று மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் சுமதியின் மகள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
